சிற்பம் மணலில் வரையும் சிற்பமாய் அல்ல ! கல்லில் வடிக்கும் சிற்பமாய் இரு ! நிலைப்பாய் காலங்கள் தாண்டி !...
கவிதை - சிற்பம்
சிற்பம்
மணலில் வரையும்
சிற்பமாய் அல்ல !
கல்லில் வடிக்கும்
சிற்பமாய் இரு !
நிலைப்பாய்
காலங்கள் தாண்டி !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
உன் காலடியில் சிகரம் என்று மலைக்காதே உச்சியை அடைந்த பின் சிகரமும் உன் காலடியில்! - வாழ்த்துக்களுடன் ஜெக...
கவிதை - உன் காலடியில்
உன் காலடியில்
சிகரம் என்று
மலைக்காதே
உச்சியை அடைந்த பின்
சிகரமும்
உன் காலடியில்!
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
கனவு நிறைவேற கனவு நிறைவேற வழி தேடுங்கள் ! கனவு நிறைவேற முயற்சி எடுங்கள் ! கனவு நிறைவேற பயிற்சி எடுங்கள...
கவிதை - கனவு நிறைவேற
கனவு நிறைவேற
கனவு நிறைவேற
வழி தேடுங்கள் !
கனவு நிறைவேற
முயற்சி எடுங்கள் !
கனவு நிறைவேற
பயிற்சி எடுங்கள் !
கனவு நிறைவேற
பிடிவாதமாய் இருங்கள் !
கனவு நிறைவேற
உழைத்திடுங்கள் !
நிறைவேறிய பின்
அதனை கொண்டாடுங்கள் !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
சொர்க்கம் மரங்கள் அடர்ந்திருந்தால் அது காடு ! வீடுகள் அடர்ந்திருந்தால் அது வீடு ! மனித நேயம் அடர்ந்திருந்தா...
கவிதை - சொர்க்கம்
சொர்க்கம்
மரங்கள் அடர்ந்திருந்தால்
அது காடு !
வீடுகள் அடர்ந்திருந்தால்
அது வீடு !
மனித நேயம் அடர்ந்திருந்தால்
அதுவே சொர்க்கம் !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
வாழ்வை மாற்றும் சேரும் ஒவ்வொரு துளியும் ஆறாக மாறும் ! நடக்கும் ஒவ்வொரு அடியும் இமயம் எட்டும் ! ...
கவிதை - வாழ்வை மாற்றும்
வாழ்வை மாற்றும்
சேரும் ஒவ்வொரு
துளியும் ஆறாக
மாறும் !
நடக்கும் ஒவ்வொரு
அடியும் இமயம்
எட்டும் !
சேர்க்கும் ஒவ்வொரு
காசும் பயன்
தரும் !
விதைக்கும் ஒவ்வொரு
விதையும் நிச்சயம்
முளைக்கும் !
சிந்தும் ஒவ்வொரு
துளி வியர்வையும் நிச்சயம்
முத்தாய் மாறும் !
கற்கும் ஒவ்வொரு
விஷயமும் வாழ்வை
மாற்றும் !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
விழுந்த பிறகே தவறு செய்த பிறகே திருந்துகிறோம் ! விபத்து நிகழ்ந்த பிறகே வருத்தப்படுகிறோம் ! காலம் கடந்த பிறக...
கவிதை - விழுந்த பிறகே
விழுந்த பிறகே
தவறு செய்த பிறகே
திருந்துகிறோம் !
விபத்து நிகழ்ந்த பிறகே
வருத்தப்படுகிறோம் !
காலம் கடந்த பிறகே
யோசிக்கிறோம் !
தண்ணீர் தீர்ந்த பிறகே
சேமிக்கிறோம் !
பணம் தீர்ந்த பிறகே
சேமிக்கிறோம் !
வயது தீர்ந்த பிறகே
உணர்கிறோம் !
நோய் வந்த பிறகே
கவனிக்கிறோம் !
இடறி விழுந்த பிறகே
நிமிர்கிறோம் !
விழுவதை விட
விழுந்த பின்
எழுவதே சிறப்பு !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
சனி திசை சாலை விதிகளை மதித்தால் உனக்கு சுக்கிர திசை ! அதை மிதித்தால் உனக்கு சனி திசை ! - வாழ்த்துக்...
கவிதை - சனி திசை
சனி திசை
சாலை விதிகளை
மதித்தால் உனக்கு
சுக்கிர திசை !
அதை
மிதித்தால் உனக்கு
சனி திசை !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
கவிதை - புரியவில்லை பள்ளியில் படிக்கும் போது புரியவில்லை ! ஏன் ? இந்த படிப்பு என்று ! கல்லூரியில் படிக்கும் ப...
கவிதை - புரியவில்லை
கவிதை - புரியவில்லை
பள்ளியில் படிக்கும் போது
புரியவில்லை !
ஏன் ? இந்த படிப்பு
என்று !
கல்லூரியில் படிக்கும் போது
புரியவில்லை !
எதற்கு ? இந்த படிப்பு
என்று !
வேலை பார்க்கும் போதும்
புரியவில்லை !
ஏன் படித்தோம்?
எதற்கு படித்தோம்?
என்று !
கல்வி என்பது வியாபாரமாகிவிட்ட
இக்காலத்தில் !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
தவற விட்டுவிட்டேன் காத்து கிடந்தேன் பேருந்து நிறுத்தத்தில் அவளின் வருகைக்காக ! அவள் மிதிவண்டி வாங்கி விட்டாள...
கவிதை - தவற விட்டுவிட்டேன்
தவற விட்டுவிட்டேன்
காத்து கிடந்தேன்
பேருந்து நிறுத்தத்தில்
அவளின் வருகைக்காக !
அவள் மிதிவண்டி
வாங்கி விட்டாள்
என தெரியாமல் !
ஆதலால்
தவற விட்டுவிட்டேன்
அவளையும், பேருந்தையும்
ஒரு சேர !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
காதலும் மாயமாய் வருவாள் என்றேன் அவளும் வந்தாள் காதலும் வந்தது ! காதலை சொல்ல நினைத்த வேளையில் அவளும் வரவ...
கவிதை - காதலும் மாயமாய்
காதலும் மாயமாய்
வருவாள் என்றேன்
அவளும் வந்தாள்
காதலும் வந்தது !
காதலை சொல்ல
நினைத்த வேளையில்
அவளும் வரவில்லை
காதலும் வரவில்லை !
நினைத்த உடன்
சொல்ல முடிவதில்லை
காதலில் !
மறைப்பதாலேயே மறைந்தும்
போகிறது
காதலும் மாயமாய் !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
அவளும் நானுமாக சந்தித்த நாள் முதல் அவளை நான் சிந்தித்து கொண்டிருந்தேன் ! நினைத்து கொண்டிருப்பாள் என நினைத்...
கவிதை - அவளும் நானுமாக
அவளும் நானுமாக
சந்தித்த நாள் முதல்
அவளை நான்
சிந்தித்து கொண்டிருந்தேன் !
நினைத்து கொண்டிருப்பாள்
என நினைத்தேன் மாறாக
நிந்தித்து கொண்டு இருந்திருக்கிறாள் !
நிந்தித்தவளை என்னை பற்றி
சிந்திக்க வைத்தேன் இன்று
நாளை
நானும் அவளுமாக !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
இன்னும் நிறைய கவிதைகள் படிக்க
காதலில் மட்டுமே கிடைக்காது என்று தெரிந்தும் விருப்பம் மேல் இடுவது காதலில் மட்டுமே ! தொலைந்து விடுவோம் என்று த...
கவிதை - காதலில் மட்டுமே
காதலில் மட்டுமே
கிடைக்காது என்று தெரிந்தும்
விருப்பம் மேல் இடுவது
காதலில் மட்டுமே !
தொலைந்து விடுவோம் என்று
தெரிந்தும் அதை விரும்புவது
காதலில் மட்டுமே !
காண்பது அரிது என்று
தெரிந்தும் தவம் இருப்பது
காதலில் மட்டுமே !
பதிலை எதிர்பார்த்தும்
கேட்காமலேயே விடுவது
காதலில் மட்டுமே !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
காதல் கதவு ஜன்னல் நிலை வழியே தெரிந்தது அழகிய பூ ஒன்று ! பதிந்தது என் பார்வை அதை பார்த்து புன்னகை சிந்தி...
கவிதை - காதல் கதவு
காதல் கதவு
ஜன்னல் நிலை
வழியே தெரிந்தது
அழகிய பூ ஒன்று !
பதிந்தது என் பார்வை
அதை பார்த்து
புன்னகை சிந்தியது பூ!
திறந்து கொண்டது
காதல் என்னும் கதவு !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
ஒரு தலை காதலில் நான் அவள் பார்வை என் பக்கம் திரும்பியது சில நொடிகள் தான் ! அதை நினைத்து நான் மகிழ்ந்த நாட்கள...
கவிதை - ஒரு தலை காதலில் நான்
ஒரு தலை காதலில் நான்
அவள் பார்வை
என் பக்கம் திரும்பியது
சில நொடிகள் தான் !
அதை நினைத்து நான்
மகிழ்ந்த நாட்கள்
எத்தனையோ !
அவள் என்னை
கடந்து போனது
சில நொடிகள் தான் !
அதை நினைத்து நான்
மகிழ்ந்த நாட்கள்
எத்தனையோ !
அவள் என்
அருகில் நின்றது
சில நொடிகள் தான் !
அதை நினைத்து நான்
மகிழ்ந்த நாட்கள்
எத்தனையோ !
இன்னும் எத்தனை
நாட்களோ
ஒரு தலை காதலில்
நான் !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
சொல்லா காதல் மண்ணுக்குள் விழுந்த விதை ஒன்று முளைக்காமலே போனது ! கண்ணுக்குள் விழுந்த காட்சி ஒன்று நிஜம...
கவிதை - சொல்லா காதல்
சொல்லா காதல்
மண்ணுக்குள் விழுந்த
விதை ஒன்று
முளைக்காமலே போனது !
கண்ணுக்குள் விழுந்த
காட்சி ஒன்று
நிஜமகாமல் போனது !
விதை
மண்ணுக்கு உரமானது !
காட்சி
நினைவுகளின் கூடாரமானது !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
ஒரு முயலின் குளிர்காலம் அகன்று விரிந்து எங்கும் இயற்கை வளம் கொட்டி கிடந்த அந்த மலையின் உச்சியில் முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் ...
ஒரு பக்க கதை - ஒரு முயலின் குளிர்காலம்
ஒரு முயலின் குளிர்காலம்
அகன்று விரிந்து எங்கும் இயற்கை வளம் கொட்டி கிடந்த அந்த மலையின் உச்சியில் முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் சாம்சன். சாம்சன் முயலானது நல்ல அறிவும் தன்மையான குணமும் கொண்டது. அந்த மலையானது கடல் மட்டத்திலிருந்து 6000 அடிக்கும் மேலாக இருந்தது. அதனால் குளிர் காலத்தில் பனி செய்து உறைந்து போகும். அந்த சமயத்தில் அங்கு வாழும் உயிரினங்களில் சில குளிர் கால உறக்கத்திற்கும், சில தற்காலிகமாக வேறு ஒரு இடத்திற்கு புலம் பெயர்ந்து சென்று விடும். சாம்சன் மற்றும் அதனை சார்ந்த முயல்களும் சற்று தொலைவில் உள்ள புதர்களில் தங்கள் வலைகளை அமைத்து அங்கு வாழ ஆரம்பிக்கும்.
அனால் அங்கு அவர்களுக்கு ஏற்படும் ஒரே பிரச்சினை உணவு தான் எனவே உணவு சேமித்து கொண்டு செல்லலாம் என முடிவெடுத்தன. ஆதலால் அனைத்து முயல்களும் தங்களுக்கு தேவையான உணவை சேகரிக்க தொடங்கின. சாம்சனுக்கு கேரட்டும், நிறைய கொட்டை மற்றும் விதைகளை சேகரிக்க எண்ணி அந்த வேலையை செய்து கொண்டிருந்தது. அந்த முயல் கூட்டத்தில் ஜான் என்ற சோம்பேறி முயல் இருந்தது. அது தன்னுடைய சோம்பல் குணத்தால் உணவை சேமிக்காமல் இருந்து வந்தது அதோடு மட்டுமில்லாமல் தந்திரமாக அடுத்தவர் உணவை திருடி தன் வலையில் வைத்துக் கொண்டது.
சாம்சனின் வலையில் இருந்தும் சில கேரட்டுகளை திருடியது ஜான். தன் வலையில் இருந்து சில கேரட்டுகள் திருடு போயிருப்பதை கண்டுபிடித்து விட்டது சாம்சன். மீண்டும் இது நிகழாமல் இருக்க சில அடையாளங்களை அதன் மேல் ஏற்படுத்தி வைத்தது. மறு நாளே அதன் திட்டம் பலித்தது.சாம்சனின் அடையாளத்துடன் கூடிய ஒரு கேரட்டை ஜான் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து விட்டது. அதனிடம் அதை பற்றி விசாரிக்கும் போது ஜான் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தது. சட்டென்று அதனிடம் இருந்த கேரட்டை பிடுங்கி அதில் இருந்த அடையாளத்தை சுட்டி காட்டியது. சாம்சன் ஜான் திருடியதை கண்டுபிடித்ததும் முயல் கூட்ட தலைவரிடம் சொல்லிவிடுவதாக ஜானை மிரட்டியது அப்படி சொல்லிவிட்டால் அதனை அந்த கூட்டத்திலிருந்து விலக்கி வைத்து விடுவர். இதனைக் கேட்டு பயந்த ஜான் தன்னுடைய தவறை ஒத்துக் கொண்டது. உடனடியாக சாம்சனிடம் மன்னிப்பு கேட்டது.
முதலில் சாம்சன் கோபப்பட்டாலும் அவன் மன்னிப்பு கோரியதும் மனம் மாறி மன்னித்தது, அதோடு மட்டுமில்லாமல் திருடுவது தவறு என்றும் அடுத்தவர் உழைப்பில் வாழ்வது குற்றம் எனவும் அறிவுரை கூறியது. அதன் அறிவுரையால் உள்ளம் திருந்திய ஜான் இனி தான் உழைத்தே உணவை சேமிப்பதாக உறுதி அளித்தது. அவன் திருந்தியதை பார்த்த சாம்சன் மகிழ்ச்சியுடன் தன் வேலையை தொடர்ந்தது.
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
வண்டும் தட்டானும் புற்களால் சூழப்பட்ட பசுமையான நிலப்பரப்பில் வண்டு ஒன்று அதன் வலையை அமைத்திருந்தது. அவ்வண்டு குடும்பத்தில் கணவன...
ஒரு பக்க கதை - வண்டும் தட்டானும்
வண்டும் தட்டானும்
புற்களால் சூழப்பட்ட பசுமையான நிலப்பரப்பில் வண்டு ஒன்று அதன் வலையை அமைத்திருந்தது. அவ்வண்டு குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகள் என இருந்தது. ஆண் வண்டு தன் குடும்பத்தின் மீது அக்கறையோடும் பாசத்தோடும் இருந்து வந்தது. தினமும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர வசதிகளை செய்து கொடுத்தது. வண்டின் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு தட்டானை கவர்ந்தது. ஆதலால் அதனிடம் நட்பு பாராட்டியது.
விரைவிலேயே அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். அதனால் எல்லா விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். சில மாதங்களுக்கு பிறகு வண்டின் நடவடிக்கையில் சில மாற்றங்களை கவனித்தது தட்டான். அது தான் சேகரித்த உணவை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் வேறொரு இடத்தில் சேமித்து வைத்து கொண்டிருந்தது. அதை பற்றி வண்டிடம் கேட்டதற்கு பதில் கூறாமல் மவுனம் சாதித்தது. பிறகு தட்டான் கொஞ்சம் கண்டிப்புடன் கேட்கவே பின் வருமாறு கூறியது.
அமைதியாக இருந்த அந்த நிலப்பரப்பில் எங்கிருந்தோ வந்த ஓணான் ஒன்று அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. அங்கு இருந்த மற்ற சிறு சிறு உயிர்களின் வீட்டை நாசம் செய்தது. அதனிடம் எல்லோரும் பயம் கொண்டனர். நானும் என்னுடைய வீட்டை எதாவது செய்து விடுமோ என பயந்தேன். ஆதலால் அது என் வீட்டை நெருங்கிய போது அதனிடம் எங்களை விட்டு விடும் படி கெஞ்சினேன். அதற்கு அந்த ஓணான் தனக்கு தினமும் உணவளித்தால் விட்டுவிடுவதாகவும் இல்லையேல் உன் வீட்டை நாசம் செய்து விடுவேன் என மிரட்டியது. ஆகவே தான் அதற்கும் சேர்த்து உணவு சேமித்து வருகிறேன்.
இதனை கேட்ட தட்டான் நண்பனின் நிலை கண்டு வருந்தியது. பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக, நாம் தனியாக அதனை எதிர்த்து போராட முடியாது அனால் அதற்கு நல்ல பாடம் ஒன்றை புகட்டலாம் என கூறி தன் திட்டத்தை எடுத்துரைத்தது. அதன்படி அடுத்த நாள் ஓணான் உணவருந்த வந்த வேளையில் தட்டான் அதை சீண்டி அதற்கு கோபத்தை வரவழைத்தது. கோபம் கொண்ட ஓணான் தட்டானை பிடிக்க துரத்தியது. அது தன்னை தூரத்தி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தட்டான் அதற்கு சற்று போக்கு காட்டி பறந்தது.
இப்படியே கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு இடத்தில மறைந்து கொண்டது. அது மறைந்து இருந்த இடத்திற்கு வந்த ஓணான் நீ இங்கு இருப்பது எனக்கு தெரியும் உன்னை என்ன செய்கிறேன் பார் என ஆவேசமாக கத்தியது. பின்னர் தான் , தட்டானை பிடிக்க வந்து தானே சிக்கலில் மாட்டி கொண்டது அதற்கு தெரிய வந்தது.
அது நின்ற இடம் ஒரு எறும்பு புற்று அதில் ஆயிரக்கணக்கில் எறும்புகள் இருந்தன. தங்கள் புற்றுக்குள் அத்துமீறி நுழைந்த ஓணானை நாலாபுறமும் கடிக்க ஆரம்பித்தன. ஓணான் சுதாரித்துக் கொண்டு ஓட எத்தணிப்பதற்குள் அவை அதிகமாக கடிக்க தொடங்கியிருந்தன. அங்கும் இங்கும் ஓடிய ஓணான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடியது. அடுத்தவர் உழைப்பில் வாழ நினைத்தால் இப்படியான நிலைமை தான் ஏற்படும் என்பதை உணர்ந்த ஓணான் மறுபடியும் அந்த பக்கம் கால் வைக்கவில்லை. தட்டான் தன் சமயோஜித புத்தியால் வண்டுக்கு வந்த பிரச்சினையை தீர்த்து வைத்தது வண்டும் அதை பாராட்டியது. ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்தது என தட்டானும் வண்டும் மகிழ்ந்தனர்.
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
வானவில்லுக்கே கடன் பச்சை வயல் முழுவதும் வானவில்லுக்கே கடன் கொடுக்கும் அளவிற்கு வண்ணங்கள் பூக்களாய் ! ஆழமான ந...
கவிதை - வானவில்லுக்கே கடன்
வானவில்லுக்கே கடன்
பச்சை வயல் முழுவதும்
வானவில்லுக்கே கடன்
கொடுக்கும் அளவிற்கு
வண்ணங்கள் பூக்களாய் !
ஆழமான நீர் பாலைவனம்
அற்புதமான சோலைகளுடன்
வானவில்லே கடன் கேட்கும்
அளவிற்கு கொள்ளை
வண்ணங்கள் மீன்களாய் !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
நாளைய விடியல் நாளை விடியல் வரும் என நம்பி இன்று செய் நாளை தானாய் வரும் இன்றைய செயலின் பலன் அதுவே ...
கவிதை - நாளைய விடியல்
நாளைய விடியல்
நாளை விடியல்
வரும் என நம்பி
இன்று செய்
நாளை
தானாய் வரும்
இன்றைய செயலின் பலன்
அதுவே
உனக்கு தரும்
நாளைய விடியலை !
- வாழ்த்துகளுடன்
ஜெகன்
காரணம் நீயும் ஆகலாம் மண் விரும்பும் மழையை மனிதா உன் தேவைக்காக மதி கொண்டு மூடிவிட்டாய் ! மண்ணுக்குள் மழை சென்றால் தா...
கவிதை - 8 - காரணம் நீயும் ஆகலாம்
காரணம் நீயும் ஆகலாம்
மண் விரும்பும் மழையை
மனிதா உன் தேவைக்காக
மதி கொண்டு மூடிவிட்டாய் !
மண்ணுக்குள் மழை சென்றால் தான்
மனிதா நீ வாழ்வாய்
இல்லையேல்
நாளை மனிதம் சாயலாம்
அதன் காரணம்
நீயும் ஆகலாம்
இன்ப சுற்றுலா கண்ணன், பிரபு மற்றும் ரவி மூவரும் பால்ய நண்பர்கள். அனைவரும் படிப்பை முடித்துவிட்டு வெவ்வேறு துறைகளில் பணியாற்றி கொண...
இன்ப சுற்றுலா
இன்ப சுற்றுலா
கண்ணன், பிரபு மற்றும் ரவி மூவரும் பால்ய நண்பர்கள். அனைவரும் படிப்பை முடித்துவிட்டு வெவ்வேறு துறைகளில் பணியாற்றி கொண்டிருந்தார்கள். கண்ணன் தொழில்நுட்பத்துறையிலும், ரவி கட்டிடக்கலையிலும் பொறியியல் முடித்து விட்டு பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பிரபுவோ படிப்பு ஏறாத காரணத்தினால் ஓட்டுநர் பயிற்சி பெற்று ஓட்டுநராக பணி புரிந்து வந்தான். அதில் திறமையானவாக திகழ்ந்தான்.
வேலைப்பளு மற்றும் மன அமைதியின்மை காரணமாக எதாவது சுற்றுலா சென்று வந்தால் சற்று புத்துணர்ச்சியாக இருக்கும் என எண்ணினான். குறிப்பாக அருவி இருக்கும் இடத்திற்கு சென்று வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். ஆதலால் நண்பர்களிடம் தன் எண்ணத்தை கூறினான். அவர்களும் சுற்றுலா செல்வதற்கு ஆர்வம் காட்டினர் .கண்ணனிடம் கார் இருந்ததாலும் பிரபுவுக்கும் கார் ஓட்ட தெரியும் என்பதாலும் காரிலியே சுற்றுலா சென்று வர தீர்மானித்தனர். அனைவரும் தங்கள் பெற்றோரிடம் முறையாக அனுமதி வாங்கினர்.
சுற்றுலா தளமானது அவர்கள் இருக்கும் ஊரில் இருந்து 300 கி .மீ . தொலைவில் இருந்தது ஆதலால் அதிகாலையிலேயே கண்ணன் வீட்டில் இருந்து புறப்பட்டனர். நீண்ட பயணம் என்பதால் தண்ணீர் மற்றும் காலை சாப்பாடும் எடுத்து கொண்டனர். பிரபு ஓட்டுநர் என்பதால் அவனே கார் ஓட்டினான். சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு காலை சாப்பாட்டிற்காக காரை நிறுத்தினர் .
சாப்பிட இட வசதியும், தண்ணீர் வசதியும் இருந்த இடத்தில காரை நிறுத்தி உணவருந்தினர். அப்போது பள்ளி காலத்து நினைவுகளை அசை போட்டு மகிழ்ந்தனர். சாப்பிட்டு முடித்து விட்டு காரை எடுக்கும் போது தான் கார் சக்கரங்களில் ஒன்று பழுதாகி இருப்பதை கண்டனர். நெடுஞ்சாலை என்பதாலும், தங்களுக்கு சக்கரத்தை மாற்ற தெரியாததால் கண்ணனும், ரவியும் கவலையுற்றனர்.
அனால் பிரபு தான் ஓட்டுநர் ஆயிற்றே அவனுக்கு இது சம்பந்தமான வேலைகள் எல்லாம் அத்துப்படி ஆனால் இவை எல்லாம் அவன் நண்பர்களுக்கு தெரியாது. ஏனெனில் பிரபு சரியாக படிக்காத காரணத்தினால் இவை எல்லாம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கருதினர். ஆதலால் சுற்றுலாவை அனுபவிக்க முடியாமல் போகுமோ என மிகவும் வருந்தினர். இதனை கவனித்த பிரபு நீங்கள் ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம். நான் ஓட்டுநர் ஆன புதிதில் இந்த மாதிரி பிரச்சினைகள் அடிக்கடி வந்ததால் இந்த வேலைகளுக்கான சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆதலால் நானே மாற்று சக்கரத்தை பொருத்தி விடுகிறேன் என கூறினான்.
மள மள வென மாற்று சக்கரத்தை எடுத்து பழுதான சக்கரத்திற்கு பதிலாக பொருத்தினான். கண்ணனும் ரவியும் அவனுக்கு உதவி புரிந்தனர். சிறிது நேரத்தில் கார் தயாரானது. என்னதான் பிரபு சரியாக படிக்காவிட்டாலும் அவன் தொழிலில் திறமையாக இருப்பதை பார்த்த கண்ணனும், ரவியும் அவனை பற்றிய குறைந்த மதிப்பீட்டை மாற்றிக் கொண்டனர். பிரபுவும் தன் நண்பர்களின் மன மாற்றத்தால் மகிழ்ந்தான். அவர்களது சுற்றுலாவும் இனிதே தொடர்ந்தது.
முயற்சி திருவினையாக்கும் கண்ணப்பன் ஒரு நல்ல தொழிலாளி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்பவன். தற்போது அவன் ஒரு தனியார் நிறுவன...
முயற்சி திருவினையாக்கும்
முயற்சி திருவினையாக்கும்
கண்ணப்பன் ஒரு நல்ல தொழிலாளி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்பவன். தற்போது அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இவ்வாறு காலம் சென்று கொண்டிருக்கையில் அவன் வேலை செய்யும் துறையின் தலைவர் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பொதுவாக இந்த மாதிரி அவசர கூட்டங்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் கூட்டுவர்.
இன்று என்ன செய்தியோ என கண்ணப்பனும் அவனுடன் வேலை செய்யும் சக ஊழியர்களும் கூடி இருந்தனர். அவர்களது துறை தலைவர் எப்போதும் எதையும் சட்டென அதே சமயத்தில் தெளிவாகவும் கூறி விடுவார். அவர் உள்ளே நுழைந்ததும் ஆங்காங்கே பேசி கொண்டிருந்த அனைவரும் அமைதியாயினர். அவர் பேச ஆரம்பித்த உடனையே தான் வேறு துறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் , இந்த துறைக்கு வேறு ஒருவர் தலைவராக வருவார் எனவும் அறிவித்தார்.
யார் அந்த புதிய தலைவர் என அனைவரும் கேள்விக்குறியுடன் அவரை நோக்கினர். அவர்களது புதிய தலைவர் அவர்களில் ஒருவர் என்றும் அவர் பெயர் கண்ணப்பன் என்றும் அறிவித்தார் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர் . கண்ணப்பனுக்கோ தன்னை சுற்றி நடப்பது என்னவென்று புரியவில்லை, திடிரென்று வந்த இந்த செய்தியால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான் சிறிது நேரத்திற்கு பிறகே ஆசுவாசம் ஆனான்.
கண்ணப்பன் நல்ல தொழிலாளி தான் கொடுத்த வேலையை சரியாக செய்பவன் தான் என்றாலும் யாரிடமும் பேச , பழக கூச்சப்படுவான். இது இப்போது மட்டுமல்ல பள்ளி பருவத்திலிருந்தே அப்படித்தான். ஏனெனில் அவன் தேகம் மெலிந்து ஒல்லியாக காணப்பட்டான் ஆதலால் அனைவரும் அவனை கேலி செய்தனர் . இதன் காரணமாகவே அவன் சில விஷயங்களில் விலகியே இருப்பான். பள்ளி பருவம் ஆதலால் இந்த பிரச்சினை பெரிதாக பாதிக்கவில்லை.
அனால் துறை தலைவர் ஆனதில் இருந்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. ஏனெனில் எல்லா தொழிலார்களிடம் அன்புடன் பழகினால் தான் எளிதில் வேலை வாங்கவும், முடிக்கவும் முடியும். அவனது கூச்ச சுபாவத்தால் வேலைகள் சரிவர முடியாமல் தேங்கியது. மேலாளர்களிடம் திட்டு வாங்க நேர்ந்தது. அதன் காரணமாக தொழிலாளர்களிடம் எரிந்து விழுந்தான் இதனால் தொழிலாளர்களுக்கும் அவனுக்கும் இடையே மனஸ்தாபம் நேரிட்டது. இதனால் கண்ணப்பன் மனம் உடைந்தான். வேலையை கூட விட்டு விட நினைத்தான்.
மனம் உடைந்த நிலையில் புத்தகங்கள் படிப்பது அவனது வாடிக்கை தற்போதைய சூழ்நிலையும் அவ்வாறு இருக்கவே ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினான். அதில் இருந்த ஒரு வாக்கியம் தற்போது அவன் இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளிவருவதற்கான வழியை கண் முன்னே காட்டியது. அவ்வாக்கியம் என்னவெனில் "போர்க்களத்தில் நல்ல தற்காப்பு யாதெனில் எதிர்த்து நிற்பது தான்". இவ்வாக்கியம் போர்க்களத்தில் இருக்கும் வீரனுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தற்போது கண்ணப்பனின் சூழ்நிலையும் அதுதான். இதனால் மனதளவில் புது தெம்பு மற்றும் புத்துணர்ச்சி பெற்றான். மறுநாள் அலுவலகத்தில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டினான். அவன் பேசிய முதல் வார்த்தையே அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என்பது தான். ஏனெனில் தனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக நிகழ்ந்து விட்ட தவறுகளுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கோரினான் மேலும் வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாது என்று உறுதி கொடுத்தான் நம்பிக்கையாக.
கண்ணப்பனின் இந்த பேச்சு மற்றும் அவன் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை தொழிலாளர்களுக்கு ஆச்சிரியமாகவும் அதே சமயத்தில் அவன் மீது மரியாதையையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு வந்த அணைத்து பிரச்சினைகளையும் நம்பிக்கையுடன் எதிர் கொண்டு தீர்வு கண்டான். ஏற்கனவே இருந்த தவறுகளையும் சரி செய்தான். தொழிலாளர்களிடமும் அன்பாக பழக கற்றுக்கொண்டான். தன் துறை மட்டுமல்லாது வேறு துறை தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களிடமும் பழகி நற்பெயர் பெற்றான்.
சிறிது காலத்திற்குள்ளாகவே அந்த நிறுவனத்தில் தன் துறையை சிறந்த துறையாக மாற்றிக் காட்டினான். இதனால் அவன் தலைமையின் கீழ் பணியாற்ற பலரும் விருப்பம் கொண்டனர். இவைகளை தன் சக துறை தலைவர்கள் சொல்லக் கேட்டு பெருமிதம் கொண்டான். " முயற்சி திருவினையாக்கும் " என்பதை கண்கூடாக உணர்ந்தான்.
இன்னும் நிறைய கதைகள் படிக்க
விழுந்தேன் காதலில் ஒரு வரிசையில் நான் எதிர் வரிசையில் அவள் புது வரவாக பூத்திருந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி வண...
கவிதை - 7 - விழுந்தேன் காதலில்
விழுந்தேன் காதலில்
ஒரு வரிசையில் நான்
எதிர் வரிசையில் அவள்
புது வரவாக பூத்திருந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சி
வண்ணம் கவரவில்லை
புன்னகை கவர்ந்தது
விழுந்தேன் காதலில் !
0 Comments: