உழைப்பை நம்பு விரும்பியதை அள்ளி தர வாழ்க்கை ஒன்றும் கற்பக விருட்சம் அல்ல ! விரும்பியதை எல்லாம் அள்ளி கொடுக்க இ...
கவிதை - 6 - உழைப்பை நம்பு
உழைப்பை நம்பு
விரும்பியதை அள்ளி தர
வாழ்க்கை ஒன்றும்
கற்பக விருட்சம் அல்ல !
விரும்பியதை எல்லாம் அள்ளி
கொடுக்க இங்கு யாரும்
கர்ணனும் அல்லர் !
விரும்பியதை அள்ளி எடுக்க
உழைப்பை நம்பு
அல்லி தரும்
நிச்சயமாக !
பெண் என்பவள் பட்டு பட்டாடை விரும்பி அணிபவள் ! போராடும் குணம் கொண்டவள் ! வெற்றிக்கு துணை நிற்பவள் ! பிறந்த வீடும் பு...
கவிதை - 5 - பெண் என்பவள்
பெண் என்பவள்
பட்டு பட்டாடை விரும்பி அணிபவள் !
போராடும் குணம் கொண்டவள் !
வெற்றிக்கு துணை நிற்பவள் !
பிறந்த வீடும் புகுந்த வீடும் கொண்டவள் !
புதிய சிந்தனைகள் கொண்டவள் !
பூ சூடுவதை பெருமையாக காண்பவள்!
வெற்றியை தருபவள் !
வெற்றியை கொண்டாடுபவள் !
முயல்வாய் திசைகள் நான்கிலும் தினமும் தீப்பிழம்புகள் சூழ்ந்தாலும் சுயம்பாய் நின்று சூரிய கதிர்கள் எரித்தாலும் ...
கவிதை - 4 - முயல்வாய்
முயல்வாய்
திசைகள் நான்கிலும்
தினமும் தீப்பிழம்புகள் சூழ்ந்தாலும்
சுயம்பாய் நின்று
சூரிய கதிர்கள் எரித்தாலும்
மீண்டும் எழும் பீனிக்ஸ்
பறவை போல் மீண்டும்
கடந்து சென்றது மனம் முழுவதும் அவள் ஆனாலும் பேசாது இருந்தேன் ஆதலால் பேசாமலே இருந்து விட்டது என் காதலும் ! மனம...
கவிதை-3 - கடந்து சென்றது
கடந்து சென்றது
மனம் முழுவதும் அவள்
ஆனாலும்
பேசாது இருந்தேன்
ஆதலால்
பேசாமலே இருந்து விட்டது
என் காதலும் !
மனம் முழுவதும் வேதனை
ஆதலால்
காலம் வரும் என்றேன்
ஆனால்
கடந்து சென்றது
காலமும்
வாழ்க்கையும் மட்டுமே !
இன்னும் நிறைய கவிதைகள் படிக்க
வண்ணத்துப்பூச்சி சிறகுகள் முழுவதும் வானவில்லை கொண்டதால் வர்ணத்தின் பெயரையே தனதாக்கி கொண்டது வண்ண சிறகானை வண்ணப் ...
கவிதை-2 - வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சி
சிறகுகள் முழுவதும் வானவில்லை
கொண்டதால் வர்ணத்தின் பெயரையே
தனதாக்கி கொண்டது
வண்ண சிறகானை வண்ணப்
பூக்கள் ஈர்க்கும் அமிழ்து ஈனும்
அதுவும் குடித்து அகமகிழும்
வண்ணம் கொண்டதாலே சிறுவர்களை
எளிதில் கவருவான் அவர்களிடம்
அகப்பட்டும் கொள்வான்
பெண்களின் பிரியம் பட்டாடை
அதற்காக தன் உயிரையே
தாரை வார்ப்பான்
சிறகுகளில் கண்ணையும் கொண்டவன்
வண்ணத்துக்கு உயிர் கொடுத்தவன்
ஒரு தலை காதல் முதல் சந்திப்பில் ஏற்பட்ட பரவசம் ! அடுத்தடுத்த சந்திப்புகளில் இரு மடங்கானது ! மிதிவண்டியில் நான் அவளை ...
கவிதை-1 - ஒரு தலை காதல்
ஒரு தலை காதல்
முதல் சந்திப்பில் ஏற்பட்ட
பரவசம் ! அடுத்தடுத்த
சந்திப்புகளில் இரு மடங்கானது !
மிதிவண்டியில் நான்
அவளை பின்தொடர !
விதி வண்டியும் சேர்ந்து கொண்டது
தகுதி ரூபத்தில் !
இல்லை தகுதி என
நான் பின் வாங்க
பின் வாங்கி கொண்டது
காதலும் ஒரு தலையாய் !
இன்னும் நிறைய கவிதைகள் படிக்க
காலத்தில் செய்த உதவி அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமத்தின் நடுவே ஒரு நீர் நிரம்பிய குளம் இருந்தது. அக்கிராம மக்கள்...
காலத்தில் செய்த உதவி
காலத்தில் செய்த உதவி
அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமத்தின் நடுவே ஒரு நீர் நிரம்பிய குளம் இருந்தது. அக்கிராம மக்கள் அனைவரும் அந்த குலத்து நீரை பயன்படுத்தி வந்தனர். சில பெண்கள் தங்கள் மற்றும் தங்களது குடும்பத்தாரின் துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு வருபவர்களில் மீனாட்சியும் ஒருவள். அவள் நல்ல குணம் மற்றும் அமைதியான தன்மை கொண்டவள்.
அதே கிராமத்தில் தாரணி எனும் ஒருத்தி இருந்தாள் அவள் சற்று அகம்பாவத்துடன் நடந்து கொள்வாள். குறிப்பாக மீனாட்சியிடம், அவளை பரிகாசிப்பது, வேலைகளில் குறுக்கீடு செய்வது என தொல்லை கொடுத்து வந்தாள். தாரணியின் நடத்தை ஊர்மக்களுக்கும் மீனாட்சிக்கும் தெரிந்து இருந்ததால், அவளுக்கு என்றேனும் ஒரு நாள் நல்ல புத்தி வரும் என விட்டு வைத்திருந்தனர்.
இந்த மாதிரியாக நாட்கள் கடந்து கொண்டிருந்த போது ஒரு நாள் வழக்கம் போல் மீனாட்சி குளத்தில் துணிகளை துவைத்து கொண்டிருந்தாள். அந்நேரம் அங்கு வந்த தாரணி, மீனாட்சி துவைத்து வைத்திருந்த துணிகளை எல்லாம் நைஸாக சேற்றில் தள்ளி விட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வேறு பக்கம் திரும்பி கொண்டாள். மீனாட்சியும் தன்னுடைய கவன குறைவால் நடந்து விட்டது என்று எண்ணி மீண்டும் அலசி துவைக்க ஆரம்பித்தாள். மீனாட்சி கஷ்டப்படுவதை பார்த்து சிரித்து கொண்டே வந்த தாரணியை அங்கு இருந்த பாம்பு ஒன்று கொத்த எத்தனித்தது. அதை கவனித்த மீனாட்சி கண நேரத்தில் அவளை வேறு பக்கம் தள்ளி காப்பாற்றினாள்.
மீனாட்சியின் செயலை நினைத்து வெட்கி தலை குனிந்த தாரணி அமைதியாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். மறுநாள் தாரணி குளக்கரைக்கு வந்து மீனாட்சியிடம் பேசினாள். உனக்கு நான் எவ்வளவோ தொந்தரவுகள் கொடுத்தும் நீ அதையெல்லாம் மறந்துவிட்டு எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்து எனது உயிரையும் வாழ்வையும் காப்பாற்றி இருக்கிறாய், உன்னிடம் நான் உளமார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
அதற்கு மீனாட்சி நீ எனக்கு எத்தனையோ தீமைகள் செய்திருந்தாலும் நான் உன்னை எனது தோழிகளில் ஒருத்தியாக தான் நினைத்தேன் என்றாள். இந்த வார்த்தைகளை கேட்டவுடன் தாரணியின் கண்கள் கலங்கி விட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் நெருங்கிய தோழிகள் ஆயினர். மீனாட்சியின் நட்பிற்கு பிறகு தாரணியின் நடவடிக்கைகள் பெருமளவு மாறி இருந்தன. இதனை கண்டு அந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்னும் நிறைய கதைகள் படிக்க
பயிற்சியே மனிதனை உயர்த்தும் கனிமொழி ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவி. அவள் தன் ஊரில் உள்ள மேல்நிலை பள்ளியில் படித்து வந்தாள்....
பயிற்சியே மனிதனை உயர்த்தும்
பயிற்சியே மனிதனை உயர்த்தும்
கனிமொழி ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவி. அவள் தன் ஊரில் உள்ள மேல்நிலை பள்ளியில் படித்து வந்தாள். அவள் ஒரு சிறந்த மாணவி. அவளது குடும்பம் நடுத்தர வர்க்கம் என்பதால் நேரம்,பணம் மற்றும் மனிதர்களை பற்றியும் அறிந்து வைத்திருந்தாள்.ஆதலால் அனைவரிடமும் அன்புடனும் பணிவுடனும் நடந்து கொண்டாள். தற்போது வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தாலும் முன் வகுப்புகளில் குறிப்பாக 9ம் வகுப்பில் சராசரி மாணவியாகவே இருந்தாள் மேலும் அரையாண்டுத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் கணித பாடத்தில் தேர்ச்சி அடையாததால் தர வரிசை பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக தனது படிப்பு விஷயத்தில் சில கண்டிப்பான நடைமுறைகளை பின்பற்ற உறுதி மேற்கொண்டாள். கணித பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினாள். முதலில் தேர்ச்சி பெற தேவையான 10 மதிப்பெண்கள் மற்றும் சிறு வினாக்களை முறையாக பயிற்சி செய்ய தொடங்கினாள் அதோடு மட்டும் இல்லாமல் தேர்வுக்கு முந்தைய நாள் தான் கற்ற அனைத்தையும் மீண்டும் மீண்டும் எழுதி பார்த்தாள். இதன் மூலம் எந்த கேள்விக்கும் பதில் எழுதுமளவிற்கு தேர்ந்தாள்.
அவளது பயிற்சி மற்றும் விடா முயற்சியின் காரணமாக 9ம் வகுப்பில் நன்றாக தேர்ச்சி அடைந்ததோடு மட்டுமில்லாமல் 10ம் வகுப்பிலும் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ந்தாள். இவ்வாறான கடின பயிற்சியின் காரணமாக இப்பொழுதும் வகுப்பில் முதல் மாணவியாக இருந்து வருகிறாள். இந்த நிலையில் அவளுடைய வகுப்பில் துர்கா எனும் மாணவி படித்து வந்தாள். அவள் எப்போதும் வீட்டுப்பாடம் செய்யாமல் வருவது, ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவது, எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாதது என இருந்து வந்தாள் மேலும் அவளால் படிப்பிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனை கவனித்து வந்த கனிமொழி அவள் மீது இரக்கம் கொண்டு அவளுக்கு உதவ எண்ணினாள்.
பள்ளி முடிந்ததும் கனிமொழி துர்காவை சந்தித்து பேசினாள். சிறிது நாட்களாகவே உன்னை கவனித்து வருகிறேன். உனக்கு என்ன பிரச்சினை ஏன் உன்னால் சரிவர படிக்க முடியவில்லை என வினவினாள். அதற்கு துர்கா, நான் என்னதான் படித்தாலும் சீக்கிரமாகவே எனக்கு மறந்து விடுகிறது என்றாள் சோகமாக. இதனை கேட்ட கனிமொழி அவளிடம் சொன்னாள், இது பெரிய பிரச்னையே இல்லை. இதற்கான தீர்வை நான் உனக்கு சொல்கிறேன். அதன்படி பயிற்சி செய் முன்னேற்றம் காண்பாய் என்று அவளுக்கு தைரியம் கொடுத்தாள்.
அதாவது எந்த பாடத்தை படித்தாலும் உடனடியாக அதை எழுதி பார்த்து விடு, எப்போது நீ படித்த பாடம் உன் மனதில் நிலையாக நிற்கிறதோ அது வரையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்று கூறினாள். துர்காவுக்கு கனிமொழி கூறிய தீர்வானது சரி என்று பட்டது மேலும் வலிய வந்து தனக்கு உதவ முன் வந்த அவள் குணம் துர்காவுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் துர்காவும் கடுமையாக பயிற்சி செய்ய துவங்கினாள்.
அந்த பயிற்சியின் வெளிப்பாடு அவள் மதிப்பெண்களில் தெரிந்தது. விரைவிலேயே நன்றாக படிக்கும் மாணவிகளின் பட்டியலில் இணைந்தாள். அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுக்கத் துவங்கினாள். இந்த மாற்றத்துக்கு காரணமான கனிமொழிக்கு அவள் உளமார நன்றி கூறினாள். பதிலுக்கு கனிமொழி இதில் என் பங்கு பெரிதாய் ஒன்றும் இல்லை நீ செய்த பயிற்சியே உன்னை உயர்த்தியது என்று பணிவுடன் கூறினாள்.
இன்னும் நிறைய கதைகள் படிக்க
ஒற்றுமையே வலிமை தமிழ் தனது பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனது கிராமம் ஒரு மலை பிரதேச கிராமம் ஆதலால் தினந்தோ...
ஒற்றுமையே வலிமை
ஒற்றுமையே வலிமை
தமிழ் தனது பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனது கிராமம் ஒரு மலை பிரதேச கிராமம் ஆதலால் தினந்தோறும் உணவைத் தேடி எடுத்து வர வேண்டும் இதுவே அவனது தினசரி கடமை ஆகும். ஒவ்வொரு நாளும் சேகரித்த உணவில் பாதியை அந்த பகுதியை தன் கைப்பிடியில் வைத்திருக்கும் அரக்கர்களுக்கு வாரியாக செலுத்தி விடுவர் அவனது பெற்றோர் இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகும். ஏனெனில் சில அரக்கர்கள் அவர்களது கிராமத்தை ஆக்ரமித்து இருந்தனர் மேலும் அவர்கள் உருவத்திலும் வலிமையிலும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். ஆதலால் யாரும் அவர்களை எதிர்க்க துணியவில்லை. சில நேரம் தமிழ் இதை பற்றி யோசிப்பான் பிறகு மனதை தேற்றி கொள்வான்.
ஓரு நாள் உணவு தேடும் போது தவறி ஒரு குழியில் விழுந்து விட்டான் அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஒருவன் அவனை காப்பாற்றினான். அவன் பெயர் அன்பு, அருகில் இருந்த கிராமத்தில் வசித்து வந்தான். தக்கசமயத்தில் தமிழுக்கு உதவி செய்து அவன் உயிரை காப்பாற்றினான் அன்றிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். ஒரு நாள் தமிழ் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அன்பிற்கு அழைப்பு விடுத்தான். ஆகவே நண்பன் வீட்டிற்கு சென்றான் அன்பு. அங்கு தமிழும் அவனது பெற்றோரும் அவனை அன்புடன் வரவேற்றனர்.
சிறிது நேரம் வீட்டில் உரையாடிவிட்டு நண்பர்கள் இருவரும் ஊரை சுற்றி பார்க்க சென்றனர். இருவரும் ஊரை சுற்றி பார்த்து கொண்டும் அவர்களுக்குள் விளையாடிக் கொண்டும் சந்தோசமாக நேரத்தை களித்தனர். பிறகு வீட்டிற்குத் திரும்பினர். இரவு உணவை முடித்த பிறகு அன்பு தமிழிடம் அரக்கர்களை பற்றி விசாரித்தான். அரக்கர்கள் இந்த கிராமத்தை ஆள்பவர்கள் என்றும் அதனால் தங்களை அடிமைகளை போல் நடத்துகிறார்கள் என்றும் அவர்களை எதிர்ப்பவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று விடுவார்கள் என்றும் தன் ஆதங்கத்தை கொட்டினான்.
இந்த விஷயங்களை கேட்டு அறிந்து கொண்ட அன்பு தமிழிடம் சில கேள்விகளை முன் வைத்தான். அரக்கர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என கேட்டான். ஒரு 100 லிருந்து 150 அரக்கர்கள் இருப்பார்கள் என்றான். உங்கள் கிராமத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என வினவினான். தனது கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள் என்றான். 1000 நபர்களை கொண்ட நீங்கள் வெறும் 100க்கும் மேற்பட்டவர்களோடு மோதி ஏன் வெல்ல முடியாது? என கேட்டான். இந்த தமிழின் சிந்தனையை தூண்டி விட்டது. நண்பர்கள் இருவரும் இணைந்து ஒரு படையை திரட்டினர் மேலும் அன்பிற்கு போர்க் கலையும் தெரியும் என்பதால் அவன் மூலம் ரகசிய பயிற்சி மற்றும் படையை உருவாக்கினர். அவர்கள் மூலம் கிராமம் முழுவதும் விழிப்பூணர்வை ஏற்படுத்தினர். முதலில் பயந்த மக்கள் பின்பு தமிழ் மற்றும் அன்பின் தைரியம் மிக்க பேச்சினால் நம்பிக்கை பெற்றனர்.
முதல் விஷயமாக அன்பு எதிரிகளின் ராணுவ ரகசியங்களை ஒற்றர்கள் மூலமாக தெரிந்து கொண்டான். சில நாட்களுக்கு பிறகு மக்கள் அனைவரையும் ரகசிய படையின் உதவியுடன் ஒன்றிணைத்து அரக்கர்களுக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்தனர் . இந்த திடிர் தாக்குதலை எதிர்பார்க்காத அரக்கர்கள் நிலை குலைந்தனர். 100 பேர் கொண்ட அரக்கர்களால் 1000 பேர் கொண்ட மக்களையும் ரகசிய படையையும் சமாளிக்க முடியாமல் சரணடைந்தனர். பின்பு அரக்கர்கள் அனைவரும் அக்கிராமத்திலிருந்து வெளியேறினார். இப்போது தான் அந்த கிராமத்து மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்தனர். மக்கள் அனைவரும் தமிழ் மற்றும் அன்பின் வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் வெகுவாக பாராட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒற்றுமையே வலிமை என்பதை புரிந்து கொண்டனர்.
இன்னும் நிறைய கதைகள் படிக்க
கண்ணப்பனும் அவன் நண்பனும் கண்ணப்பனும் தங்கமும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் தங்கள் கிராமத்திற்கு பக்கத்...
கண்ணப்பனும் அவன் நண்பனும்
கண்ணப்பனும் அவன் நண்பனும்
கண்ணப்பனும் தங்கமும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் தங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பள்ளி செல்வதோடு மட்டுமில்லாமல் விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு விவசாயத்தில் உதவியாகவும் இருந்தனர். இந்த சிறு வயதில் இருவரும் நண்பர்களாகாவும் பொறுப்பாகவும் இருப்பதை அறிந்து அவர்களது பெற்றோர் மகிழ்ந்தனர். இருவரும் பள்ளிக்கு தங்களுடைய மிதிவண்டியில் சென்று வருவார்கள்.மிதிவண்டியில் கோளாறு என்றாலோ அல்லது மிதிவண்டியை அவர்கள் பெற்றோர் எடுத்து சென்று இருந்தாலோ பேருந்தில் செல்வார்கள்.
அவர்கள் பள்ளி செல்லும் வழியானது இருபுறமும் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் அவற்றிற்கு நீர் பாய்ச்சி கொண்டிருக்கும் ஓடை, அதையடுத்து பச்சை பசேல் வரப்புகள் நடு நடுவே அவைகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்த நீரோடைகள் இவற்றை அடுத்து மாந்தோப்பு என அழகாக இருக்கும். ஆதலால் அவ்வழியே அவர்கள் செல்லும் போது மன மகிழ்ச்சியாக உணர்வார்கள். நண்பர்கள் இருவரும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கு சென்று பொழுதை கழித்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர்.
தங்கள் திட்டப்படி இருவரும் தோப்பிற்கு சென்றனர். ஒரு அரை நாள் அங்கு இருக்க நேரிடும் என்பதால் சில உணவுப் பொருட்களை தங்களுடன் கொண்டு சென்றனர். தோப்பை அடைந்த பிறகு நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் விளையாடினர். பின்பு குளிப்பதற்காக கிணற்றை நோக்கி சென்றனர்.
அந்த தோப்பின் மைய பகுதியில் அமைந்திருந்த அந்த கிணற்றில் 5 முதல் 10 படி வரை மட்டுமே ஒழுங்காக இருந்தது மற்றவை சேதம் அடைந்து இருந்தன. கிணற்றை பார்த்த கண்ணப்பன் இந்த கிணறு அவ்வளவு பாதுகாப்பானதாக தெரியவில்லை ஆதலால் இங்கு குளிக்க வேண்டாம் என தன் நண்பனை எச்சரித்தான். நண்பனின் பேச்சை காதில் வாங்காமல் கிணற்றில் தாவினான் தங்கம் குதித்த பிறகே தான் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்தான். உடனே அலற ஆரம்பித்தான்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கண்ணப்பன் அந்த தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களிடம் சென்று விவரத்தை கூறினான் . அவர்கள் விரைந்து வந்து தங்கத்தை காப்பாற்றி முதலுதவி செய்தனர். சிறிது நேரத்திலேயே மயக்கம் விழித்தான். அவன் விழித்ததும் தான் கண்ணப்பனுக்கு உயிரே வந்தது. பிறகு அங்கிருந்த ஆட்கள் நண்பர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்
.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர்கள் இருவரும் இனி எந்த காரியம் செய்தாலும் சிந்தித்து பாதுகாப்பை உறுதி செய்த பிறகே செய்ய வேண்டும் என உறுதி கொண்டனர்.
இன்னும் நிறைய கதைகள் படிக்க
இதயத்தை வென்றான் சுப்பையா நன்றாக படிக்க கூடிய மாணவன் தான் என்றாலும் அவனுக்கு இருக்கும் கூச்ச சுபாவத்தால் ...
இதயத்தை வென்றான்
இதயத்தை வென்றான்
சுப்பையா நன்றாக படிக்க கூடிய மாணவன் தான் என்றாலும் அவனுக்கு இருக்கும் கூச்ச சுபாவத்தால் யாரிடமும் பேசவோ, பழகவோ தயங்குவான். பள்ளியில் படிக்கும் போது கூட இந்த பிரச்சினை பெரிதாக தெரியவில்லை.ஏனெனில் அனைவரும் ஏறக்குறைய அறிய பிள்ளைகள். அனால் கல்லூரியில் அதிலும் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் இடம் ஆகையால் இப்பிரச்சினை பெரிதாக வளர்ந்தது.
ஒரு நாள் கடைக்கு சென்று திரும்பி கொண்டிருக்கும் போது மழை பெய்ய ஆரம்பித்தது. மழை கொட்டியது என்று முடியாது, மெல்லிய குற்றால சாரல் போல பெய்தது. அந்த நேரத்தில் எதிர் திசையில் ஒருத்தி குடையோடு வந்து கொண்டிருந்தாள்.அப்போது அவனுக்கு தெரியாது அவன் வாழ்க்கையை மாற்றப் போகிறவள் அவள் தான் என்று. சரியாக அவளை கடக்கும் போது ஒரு நொடி இருவரின் பார்வையும் உரசியது. சரியாக தெரியவில்லை அவனுக்குள் ஏற்பட்ட அதே உணர்வு அவளுக்குள்ளும் எழுந்ததா என்று.
அந்த சில நொடிகளில் சுப்பையா தன் மனதை அவளிடம் பறிகொடுத்தான். பின் வந்த நாட்களில் அவளை பற்றிய விவரங்களை சேகரிக்க போய் அவனுக்கு ஆச்சிரியம் காத்திருந்தது. அது என்னவெனில் அவள் பெயர் செல்வி என்றும் அவளும் அவன் பயில்கிற அதே கல்லூரியில் தான் வேறு ஒரு துறையில் படித்து கொண்டிருந்தாள்.அவள் தன் பக்கத்திலேயே இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டான் . பல முறை பேச முயற்சி செய்தும் அவனால் பேச முடியவில்லை மனதில் இருக்கும் காதல் மற்றும் தயக்கத்தினால்.
சுப்பையாவிற்கு பெரியம்மா மகள்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கும் இவன் வயது தன இருக்கும் ஆதலால் அவர்களிடம் போய் தன் காதலை பற்றி சொல்லி உதவி கேட்டான். இருவருக்கும் ஒரே ஆச்சிரியம் ஏனெனில் இதற்கு முன்பு அவர்களிடம் இவன் பேசியது கிடையாது . ஆனாலும் அண்ணன் என்ற முறையால் உதவி செய்தனர். சில ஆலோசனைகளையும் கூறினர் . அனால் சுப்பையாவிற்கு தான் செல்வியை பார்த்தவுடன் குளிரில் உருகிய பனியாய் உறைந்து போனான்.
எந்த யோசனையும் பலிக்காமல் போகவே ஏதாவது புத்தகம் கேட்பது போல் அவளிடம் பேசினால் என்ன என்று யோசித்தான். யோசனையும் நன்றாக இருக்கவே அதை செய்து பார்த்தான். முதல் முதலாக அவளிடம் பேசிய போது அவனுள் ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இவ்வாறு அடிக்கடி பேசி கொள்கையில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அவள் இக்கட்டான சூழலில் மாட்டி கொள்ள இவள் அவனிடம் உதவி கோராமலே உதவி செய்து அப்பிரச்சினையை தீர்த்து வைத்தான். அதோடு மட்டுமில்லாமல் அவள் குடும்பத்தினரிடமும் நற்பெயர் எடுத்தான்.
இத்தகைய செயல்களால் செல்வி அவனிடம் தன் மனதை பறிகொடுத்தாள். அதனை மறைமுகமாக அவனிடம் வெளிப்படுத்த அவனுக்கோ புரியவில்லை. கடைசியில் செல்வியே ஒரு பரிசு பொருளை அவன் கையில் திணித்து இதை இங்கு பிரிக்க வேண்டாம். வீட்டிற்கு சென்று பிரித்து பார்க்குமாறு கேட்டு கொண்டாள். சுப்பையா அதை ஆவலோடு பிரிக்க அதில் "என் இதயம் உனக்காக" என்ற வாசகத்துடன் காதலின் சின்னமான தாஜ்மஹாலை வைத்திருந்தாள் இறுதியில் அவள் இதயத்தை வென்றான் சுப்பையா.
இன்னும் நிறைய கதைகள் படிக்க
எனது தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்
வருகை தந்த
அனைவருக்கும்
நெஞ்சார்ந்த
0 Comments: