கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

                     இதயத்தை வென்றான்  சுப்பையா நன்றாக படிக்க கூடிய மாணவன் தான் என்றாலும் அவனுக்கு இருக்கும் கூச்ச சுபாவத்தால் ...

இதயத்தை வென்றான்

           
 
 Narkanavu Tamil

      

இதயத்தை வென்றான் 


சுப்பையா நன்றாக படிக்க கூடிய மாணவன் தான் என்றாலும் அவனுக்கு இருக்கும் கூச்ச சுபாவத்தால் யாரிடமும் பேசவோ, பழகவோ தயங்குவான். பள்ளியில் படிக்கும் போது கூட இந்த பிரச்சினை பெரிதாக தெரியவில்லை.ஏனெனில் அனைவரும் ஏறக்குறைய அறிய பிள்ளைகள். அனால் கல்லூரியில் அதிலும் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் இடம் ஆகையால் இப்பிரச்சினை பெரிதாக வளர்ந்தது.

                  ஒரு நாள் கடைக்கு சென்று திரும்பி கொண்டிருக்கும் போது மழை பெய்ய ஆரம்பித்தது. மழை கொட்டியது என்று  முடியாது, மெல்லிய குற்றால சாரல் போல பெய்தது. அந்த நேரத்தில் எதிர் திசையில் ஒருத்தி குடையோடு வந்து கொண்டிருந்தாள்.அப்போது அவனுக்கு தெரியாது அவன் வாழ்க்கையை மாற்றப் போகிறவள் அவள் தான் என்று. சரியாக அவளை கடக்கும் போது ஒரு நொடி இருவரின் பார்வையும் உரசியது. சரியாக தெரியவில்லை அவனுக்குள் ஏற்பட்ட அதே உணர்வு அவளுக்குள்ளும் எழுந்ததா என்று.

         அந்த சில நொடிகளில் சுப்பையா தன் மனதை அவளிடம் பறிகொடுத்தான். பின் வந்த நாட்களில் அவளை பற்றிய விவரங்களை சேகரிக்க போய் அவனுக்கு ஆச்சிரியம் காத்திருந்தது. அது என்னவெனில் அவள் பெயர் செல்வி என்றும் அவளும் அவன் பயில்கிற அதே கல்லூரியில் தான் வேறு ஒரு துறையில் படித்து கொண்டிருந்தாள்.அவள் தன் பக்கத்திலேயே இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டான் . பல முறை பேச முயற்சி செய்தும் அவனால் பேச முடியவில்லை மனதில் இருக்கும் காதல் மற்றும் தயக்கத்தினால்.

       சுப்பையாவிற்கு பெரியம்மா மகள்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கும் இவன் வயது தன இருக்கும் ஆதலால் அவர்களிடம் போய் தன் காதலை பற்றி சொல்லி உதவி கேட்டான். இருவருக்கும் ஒரே ஆச்சிரியம் ஏனெனில் இதற்கு முன்பு அவர்களிடம் இவன் பேசியது கிடையாது . ஆனாலும் அண்ணன் என்ற முறையால் உதவி செய்தனர். சில ஆலோசனைகளையும் கூறினர் . அனால் சுப்பையாவிற்கு தான் செல்வியை பார்த்தவுடன் குளிரில் உருகிய பனியாய் உறைந்து போனான்.

       எந்த யோசனையும் பலிக்காமல் போகவே ஏதாவது புத்தகம் கேட்பது போல் அவளிடம் பேசினால் என்ன என்று யோசித்தான். யோசனையும் நன்றாக இருக்கவே அதை செய்து பார்த்தான். முதல் முதலாக அவளிடம் பேசிய போது அவனுள் ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இவ்வாறு அடிக்கடி பேசி கொள்கையில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அவள் இக்கட்டான சூழலில் மாட்டி கொள்ள இவள் அவனிடம் உதவி கோராமலே உதவி செய்து அப்பிரச்சினையை தீர்த்து வைத்தான். அதோடு மட்டுமில்லாமல் அவள் குடும்பத்தினரிடமும் நற்பெயர் எடுத்தான்.

     இத்தகைய செயல்களால் செல்வி அவனிடம் தன் மனதை பறிகொடுத்தாள். அதனை மறைமுகமாக அவனிடம் வெளிப்படுத்த அவனுக்கோ புரியவில்லை. கடைசியில் செல்வியே ஒரு பரிசு பொருளை அவன் கையில் திணித்து இதை இங்கு பிரிக்க வேண்டாம். வீட்டிற்கு சென்று பிரித்து பார்க்குமாறு கேட்டு கொண்டாள். சுப்பையா அதை ஆவலோடு பிரிக்க அதில் "என் இதயம் உனக்காக" என்ற வாசகத்துடன் காதலின் சின்னமான தாஜ்மஹாலை வைத்திருந்தாள் இறுதியில் அவள் இதயத்தை வென்றான் சுப்பையா.

இன்னும் நிறைய கதைகள் படிக்க 

0 Comments: