கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

வண்ணத்துப்பூச்சி  சிறகுகள் முழுவதும் வானவில்லை  கொண்டதால் வர்ணத்தின் பெயரையே  தனதாக்கி கொண்டது  வண்ண  சிறகானை வண்ணப் ...

கவிதை-2 - வண்ணத்துப்பூச்சி

 Narkanu Tamil


வண்ணத்துப்பூச்சி 


சிறகுகள் முழுவதும் வானவில்லை 

கொண்டதால் வர்ணத்தின் பெயரையே 

தனதாக்கி கொண்டது 

வண்ண  சிறகானை வண்ணப் 

பூக்கள் ஈர்க்கும் அமிழ்து ஈனும் 

அதுவும் குடித்து அகமகிழும் 

வண்ணம் கொண்டதாலே சிறுவர்களை 

எளிதில் கவருவான் அவர்களிடம் 

அகப்பட்டும்  கொள்வான் 

பெண்களின் பிரியம் பட்டாடை 

அதற்காக தன் உயிரையே

 தாரை  வார்ப்பான் 

சிறகுகளில் கண்ணையும் கொண்டவன் 

வண்ணத்துக்கு உயிர் கொடுத்தவன் 

அவனே வண்ணத்துப்பூச்சி



இன்னும் நிறைய கவிதைகள் படிக்க 


0 Comments: