கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

        காலத்தில் செய்த உதவி  அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமத்தின் நடுவே ஒரு நீர் நிரம்பிய குளம் இருந்தது. அக்கிராம மக்கள்...

காலத்தில் செய்த உதவி

       
 Narkanavu Tamil

காலத்தில் செய்த உதவி 


அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமத்தின் நடுவே ஒரு நீர் நிரம்பிய குளம் இருந்தது. அக்கிராம மக்கள் அனைவரும் அந்த குலத்து நீரை பயன்படுத்தி வந்தனர். சில பெண்கள் தங்கள் மற்றும் தங்களது குடும்பத்தாரின் துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு வருபவர்களில் மீனாட்சியும் ஒருவள். அவள் நல்ல குணம் மற்றும் அமைதியான தன்மை கொண்டவள். 

     அதே கிராமத்தில் தாரணி எனும் ஒருத்தி இருந்தாள் அவள் சற்று அகம்பாவத்துடன் நடந்து கொள்வாள். குறிப்பாக மீனாட்சியிடம், அவளை பரிகாசிப்பது, வேலைகளில் குறுக்கீடு செய்வது என தொல்லை கொடுத்து வந்தாள். தாரணியின் நடத்தை ஊர்மக்களுக்கும் மீனாட்சிக்கும் தெரிந்து இருந்ததால், அவளுக்கு என்றேனும் ஒரு நாள் நல்ல புத்தி வரும் என விட்டு வைத்திருந்தனர்.

    இந்த மாதிரியாக நாட்கள் கடந்து கொண்டிருந்த போது ஒரு நாள் வழக்கம் போல் மீனாட்சி குளத்தில் துணிகளை துவைத்து கொண்டிருந்தாள். அந்நேரம் அங்கு வந்த தாரணி, மீனாட்சி துவைத்து வைத்திருந்த துணிகளை எல்லாம் நைஸாக சேற்றில் தள்ளி விட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வேறு பக்கம் திரும்பி கொண்டாள். மீனாட்சியும் தன்னுடைய கவன குறைவால் நடந்து விட்டது என்று எண்ணி மீண்டும் அலசி துவைக்க ஆரம்பித்தாள். மீனாட்சி கஷ்டப்படுவதை பார்த்து சிரித்து கொண்டே வந்த தாரணியை அங்கு இருந்த பாம்பு ஒன்று கொத்த எத்தனித்தது. அதை கவனித்த மீனாட்சி கண நேரத்தில் அவளை வேறு பக்கம் தள்ளி காப்பாற்றினாள்.

       மீனாட்சியின் செயலை நினைத்து வெட்கி தலை குனிந்த தாரணி அமைதியாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். மறுநாள் தாரணி குளக்கரைக்கு வந்து மீனாட்சியிடம் பேசினாள். உனக்கு நான் எவ்வளவோ தொந்தரவுகள் கொடுத்தும் நீ அதையெல்லாம் மறந்துவிட்டு எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்து எனது உயிரையும் வாழ்வையும் காப்பாற்றி இருக்கிறாய், உன்னிடம் நான் உளமார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். 

    அதற்கு மீனாட்சி நீ எனக்கு எத்தனையோ தீமைகள் செய்திருந்தாலும் நான் உன்னை எனது தோழிகளில் ஒருத்தியாக தான் நினைத்தேன் என்றாள். இந்த வார்த்தைகளை கேட்டவுடன் தாரணியின் கண்கள் கலங்கி விட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் நெருங்கிய தோழிகள் ஆயினர். மீனாட்சியின் நட்பிற்கு பிறகு தாரணியின் நடவடிக்கைகள் பெருமளவு மாறி இருந்தன. இதனை கண்டு அந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்னும் நிறைய கதைகள் படிக்க 

0 Comments: