கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

          கண்ணப்பனும் அவன் நண்பனும்      கண்ணப்பனும் தங்கமும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் தங்கள் கிராமத்திற்கு பக்கத்...

கண்ணப்பனும் அவன் நண்பனும்

         
 Narkanavu Tamil

கண்ணப்பனும் அவன் நண்பனும் 



    கண்ணப்பனும் தங்கமும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் தங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பள்ளி செல்வதோடு மட்டுமில்லாமல் விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு விவசாயத்தில் உதவியாகவும் இருந்தனர். இந்த சிறு வயதில் இருவரும் நண்பர்களாகாவும் பொறுப்பாகவும் இருப்பதை அறிந்து அவர்களது பெற்றோர் மகிழ்ந்தனர். இருவரும் பள்ளிக்கு தங்களுடைய மிதிவண்டியில் சென்று வருவார்கள்.மிதிவண்டியில் கோளாறு என்றாலோ அல்லது மிதிவண்டியை அவர்கள் பெற்றோர் எடுத்து சென்று இருந்தாலோ பேருந்தில் செல்வார்கள்.

          அவர்கள் பள்ளி செல்லும் வழியானது இருபுறமும் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் அவற்றிற்கு நீர் பாய்ச்சி கொண்டிருக்கும் ஓடை, அதையடுத்து பச்சை பசேல் வரப்புகள் நடு நடுவே அவைகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்த நீரோடைகள் இவற்றை அடுத்து மாந்தோப்பு என அழகாக இருக்கும். ஆதலால் அவ்வழியே அவர்கள் செல்லும் போது மன மகிழ்ச்சியாக உணர்வார்கள். நண்பர்கள் இருவரும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கு சென்று பொழுதை கழித்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர்.

              தங்கள் திட்டப்படி இருவரும் தோப்பிற்கு சென்றனர். ஒரு அரை நாள் அங்கு இருக்க நேரிடும் என்பதால் சில உணவுப் பொருட்களை தங்களுடன் கொண்டு சென்றனர். தோப்பை அடைந்த பிறகு நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் விளையாடினர். பின்பு குளிப்பதற்காக கிணற்றை நோக்கி சென்றனர்.

       அந்த தோப்பின் மைய பகுதியில் அமைந்திருந்த அந்த கிணற்றில் 5 முதல் 10 படி வரை மட்டுமே ஒழுங்காக இருந்தது மற்றவை சேதம் அடைந்து இருந்தன. கிணற்றை பார்த்த கண்ணப்பன் இந்த கிணறு அவ்வளவு பாதுகாப்பானதாக தெரியவில்லை ஆதலால் இங்கு குளிக்க வேண்டாம் என தன் நண்பனை எச்சரித்தான். நண்பனின் பேச்சை காதில் வாங்காமல் கிணற்றில் தாவினான் தங்கம் குதித்த பிறகே தான் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்தான். உடனே அலற ஆரம்பித்தான்.

      நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கண்ணப்பன் அந்த தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களிடம் சென்று விவரத்தை கூறினான் . அவர்கள் விரைந்து வந்து தங்கத்தை காப்பாற்றி முதலுதவி செய்தனர். சிறிது நேரத்திலேயே மயக்கம் விழித்தான். அவன் விழித்ததும் தான் கண்ணப்பனுக்கு உயிரே வந்தது. பிறகு அங்கிருந்த ஆட்கள் நண்பர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினர் 
.
        இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர்கள் இருவரும் இனி எந்த காரியம் செய்தாலும் சிந்தித்து பாதுகாப்பை உறுதி செய்த பிறகே செய்ய வேண்டும் என உறுதி கொண்டனர்.

இன்னும் நிறைய கதைகள் படிக்க 

0 Comments: