கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

இன்ப சுற்றுலா  கண்ணன், பிரபு மற்றும் ரவி மூவரும் பால்ய நண்பர்கள். அனைவரும் படிப்பை முடித்துவிட்டு வெவ்வேறு துறைகளில் பணியாற்றி கொண...

இன்ப சுற்றுலா

 narkanavutamil

இன்ப சுற்றுலா 


கண்ணன், பிரபு மற்றும் ரவி மூவரும் பால்ய நண்பர்கள். அனைவரும் படிப்பை முடித்துவிட்டு வெவ்வேறு துறைகளில் பணியாற்றி கொண்டிருந்தார்கள். கண்ணன் தொழில்நுட்பத்துறையிலும், ரவி கட்டிடக்கலையிலும் பொறியியல் முடித்து விட்டு பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பிரபுவோ படிப்பு ஏறாத காரணத்தினால் ஓட்டுநர் பயிற்சி பெற்று ஓட்டுநராக பணி புரிந்து வந்தான். அதில் திறமையானவாக திகழ்ந்தான்.

வேலைப்பளு மற்றும் மன அமைதியின்மை காரணமாக எதாவது சுற்றுலா சென்று வந்தால் சற்று புத்துணர்ச்சியாக இருக்கும் என எண்ணினான். குறிப்பாக அருவி இருக்கும் இடத்திற்கு சென்று வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். ஆதலால் நண்பர்களிடம் தன் எண்ணத்தை கூறினான். அவர்களும் சுற்றுலா செல்வதற்கு ஆர்வம் காட்டினர் .கண்ணனிடம் கார் இருந்ததாலும் பிரபுவுக்கும் கார் ஓட்ட தெரியும் என்பதாலும் காரிலியே சுற்றுலா சென்று வர தீர்மானித்தனர். அனைவரும் தங்கள் பெற்றோரிடம் முறையாக அனுமதி வாங்கினர்.

சுற்றுலா தளமானது அவர்கள் இருக்கும் ஊரில் இருந்து 300 கி .மீ . தொலைவில்  இருந்தது ஆதலால் அதிகாலையிலேயே கண்ணன் வீட்டில் இருந்து புறப்பட்டனர். நீண்ட பயணம் என்பதால் தண்ணீர் மற்றும் காலை சாப்பாடும் எடுத்து கொண்டனர். பிரபு ஓட்டுநர் என்பதால் அவனே கார் ஓட்டினான். சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு காலை சாப்பாட்டிற்காக காரை நிறுத்தினர் .


சாப்பிட இட வசதியும், தண்ணீர் வசதியும் இருந்த இடத்தில காரை நிறுத்தி உணவருந்தினர். அப்போது பள்ளி காலத்து நினைவுகளை அசை போட்டு மகிழ்ந்தனர். சாப்பிட்டு முடித்து விட்டு காரை எடுக்கும் போது தான் கார் சக்கரங்களில் ஒன்று பழுதாகி இருப்பதை கண்டனர். நெடுஞ்சாலை என்பதாலும், தங்களுக்கு சக்கரத்தை மாற்ற தெரியாததால் கண்ணனும், ரவியும் கவலையுற்றனர்.

அனால் பிரபு தான் ஓட்டுநர் ஆயிற்றே அவனுக்கு இது சம்பந்தமான வேலைகள் எல்லாம் அத்துப்படி ஆனால் இவை எல்லாம் அவன் நண்பர்களுக்கு தெரியாது. ஏனெனில் பிரபு சரியாக படிக்காத காரணத்தினால் இவை எல்லாம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கருதினர். ஆதலால் சுற்றுலாவை அனுபவிக்க முடியாமல் போகுமோ என மிகவும் வருந்தினர். இதனை கவனித்த பிரபு நீங்கள் ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம். நான் ஓட்டுநர் ஆன புதிதில் இந்த மாதிரி பிரச்சினைகள் அடிக்கடி வந்ததால் இந்த வேலைகளுக்கான சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆதலால் நானே மாற்று சக்கரத்தை பொருத்தி விடுகிறேன் என கூறினான்.

மள மள வென மாற்று சக்கரத்தை எடுத்து பழுதான சக்கரத்திற்கு பதிலாக பொருத்தினான். கண்ணனும் ரவியும் அவனுக்கு உதவி புரிந்தனர். சிறிது நேரத்தில் கார் தயாரானது. என்னதான் பிரபு சரியாக படிக்காவிட்டாலும் அவன் தொழிலில் திறமையாக இருப்பதை பார்த்த கண்ணனும், ரவியும் அவனை பற்றிய குறைந்த மதிப்பீட்டை மாற்றிக் கொண்டனர். பிரபுவும் தன் நண்பர்களின் மன மாற்றத்தால் மகிழ்ந்தான். அவர்களது சுற்றுலாவும் இனிதே தொடர்ந்தது.






2 comments:

  1. தமிழ்சசொற்கள் தேர்வு மிகவும் அருமை நண்பா

    ReplyDelete
  2. நன்றி நண்பரே....

    ReplyDelete